சதகம்

வட்டுக்கோட்டையூர் – வன்னியன்தோட்டம்
அருள்மிகு சின்னக் கதிர்காமம்
செவ்வேள் சதகம்

இயற்றியவர்
வட்டுக்கோட்டையூர்
புலவர்மணி, கலைவாரிதி, கலாபூஷணம், பண்டிதர்
திரு.க.மயில்வாகனனார்

காப்பு
(கட்டளை கலித்துறை)

சீராரும் வட்டுநகர் சின்னக் கதிர்காமச் செவ்வேள்மேல்
பேராரும் சதகமும் பாடித்தான் சேவிக்க
ஏராரும் ஆனைமுகத் தண்ணால் செல்வக்கணபதியே
நேராக முன்னின்று காத்தருள் நித்தலும் போற்றி போற்றி

நூல்
(கட்டளைக் கலித்துறை)

பொன்னொளிரும் செஞ்சடையோன் புத்தேளிர் தந்துயர் தீர்க்க
முன்னுதவு செவ்வேளே முத்தமிழாய் நின்றாய் எங்கோவே
இன்னல்தாம் தொண்டர் எய்தாமே காத்திடவே எண்ணினைநீ
வன்னவட்டுர் சின்னக் கதிர்காமம் வந்தாய் போற்றி போற்றி                                      1

போற்றுபுகழ் நாரதர் செய்த யாகத்தே போந்தமேடம்
சாற்றுபல தீங்குந்தான் தாராமே ஊர்தி ஆக்கினையே
ஏற்றபுகழ் வட்டூர் கதிர்காமத் தையா எம்மிறையே஦஘
மாற்றுயர்ந்த அன்புப் பழமென் றுமையும் சாற்றினரே                                                 2

சாற்றுவரு கும்பமுனி தாழ்ந்தெ ழுந்தே தோத்திரிக்க
ஏற்றேநீ பிரணவத் துட்பொருளை நன்கு சொன்னாயே
தோற்றமுறு வட்டுர்க் கதிர்காமா துன்பங்கள் தீர்ப்பாயே
நோற்றறியா ஏழைக்கும் நற்றமிழ் தந்தனை எங்கோவே                                            3

கோவே பார்பதம் யாவுமாகி நின்றனை சின்மயனே
தேவே மலரோன்றன் கர்வமது தீர்க்கக் சிறையிட்டாய்
காவோடு பூகமலி வட்டூர்வாழ் ஐயா கதிர்காமா
ஆவா இனியீங்கண் ஆர்தான் ஆணவங்கொண் டலைவாரே                                      4

அலையின்வாய்த் துரும்பே யொத்தாசை ஜம்வெள்ளம் அடித்தே
உலைவேன் துயரம் தீர்த்திட உள்ள்முந்தான் கொள்கிலையோ
மலையோடு சூர்தடிந்த வட்டூர்க் கதிர்காம வள்ளலே
கலைகள் அறுபான் நான்கினையும் தந்ததேநீ காத்தருளே                                         5
காவாய்நீ என்றே வாசவனும் வானோரும் கலங்கவே
தேவாதி துயர்தீர்க்க சித்தங் கொண்டேதான் சூர்தடிந்தாய்
பாவாணர் வாழ்வட்டூரைப் பதியாய் ஏற்றாய் கதிர்காமா
நாவார யாமும் போற்றி்ப் பாட எந்தம்முன் வந்தருளே                                               6

அருளே பொழியும் அமலாவிம் மாநிலம் முற்றுமுய்வான்
மருளே அகற்றும் நெடுநல்வேல் கைக்கொண்டே தன்நிற்பையே
திருவாரும் வட்டூர்ச் சின்னக் கதிர்காமம் மேய எந்தாயே
மருவார் கடம்பா மணிவேல் தாங்கி ஞானந் தருவாயே                                               7

ஞானத் தனிவேல் தாங்கியேநம் தாயர் இருவருடன்
கான மாமயில் மீதே இவர்ந்து நீயும் திரிவாயே
மானத் தமிழர் வாழ் வட்டூரா அருளை தருவாயே
தேனே அமுதேதித் திக்கும்கோ னேநின்னைப் பணிவோமே                                        8

பணிவார் தமக்கே இரங்கியருள் பன்னிரு கைக்குன்றே
அணியார் குறமின்னும் வான்மின் உடனாய்நீ பத்தொடையாய்
தணிகா சலனேவந் துநீவட்டூ ராங்கண்கோ யில்கொண்டாய்
மணியே நினையாமும் மகிழ்ந்தே பாடும்நல் வகைசெய்யே                                      9

செய்யெலாம் செந்நெல் விளைவட்டூர்ச் செவ்வேளே கதிர்காமா
உய்யலா மென்று பொய்யே பேசியாம் ஈங்கண் உழலாமல்
மெய்யேபே சித்திரியும் அன்பர்க் கருளே புரிவாய்நீ
ஐயாவே குமரா அழகா நின்தாள் தொழுகேனே                                                          10

murugan-acrylic-table-stand-BS88 1-compressed 2-compressed 3-compressed 4-compressed 5-compressed 6-compressed 7-compressed 8-compressed(1) 9-compressed 10-compressed 11-compressed 12-compressed 13-compressed 14-compressed 15-compressed 16-compressed 17-compressed 18-compressed 19-compressed 20-compressed