புராணபடன சபை

வட்டுக்கோட்டையூர் – வன்னியன்தோட்டம்
அருள்மிகு சின்னக் கதிர்காமம்

சின்னக் கதிர்காம புராணபடன சபையின் தோற்றம்

காலவெள்ளத்தில் புராணபடனமரபு சிதைந்துவிடாமற் பதுகாத்தற் பொருட்டும் இளைஞர்களை புராணபடனத்துறையில் பங்குகொள்ளச் செய்யும் பொருட்டும் சபை ஒன்று அமைக்கபட்டது. அப் புராணபடனசபையின் தலைவராக கலாபூசணம் க.மயில்வாகனனார், செயலளராக திரு.நா.புவனசுந்தரமும், பொருளாளராக அ.முருகவேளும் ஆட்சி மன்ற உறுப்பினராக ஆயுள்வேத வைத்தியகலாநிதி ந.கணேசலிங்கநாதன் மற்றும் ஆசிரியை ந.கணேசலிங்கநாதன், கு.நமசிவாயம், அரசபணி உயர் அலுவலகர் ஆறு.குமாரசாமி, கதிர்.சரவணபவன் திரு.தி.யோகேஸ்வரன் திரு.க.யோகநாதன் முதலியோரும் இடம்பெற்றனர்.
இவ் அமைப்பின் யாவரும் கந்தபுராணப் பயிற்சி பெற்றனர். மேற்படி சபையின் செயற்பாடுகளின் பொருட்டு குறிப்பிடத்தக்க ஒரு தொகை நிதி திரட்டப்பட்டது. இச் சபையினர் கந்தசஷ்டி உற்சவத்தின் 5ஆம் நாள் விழாவை நடத்தி வந்தனர்.

குடமுழுக்கின் பின் சின்னக்கதிர்காமம் தேவஸ்தானம் புராணபடனசபை

குடமுழுக்கைக் தொடர்ந்து புராணபடனசபையை புனரமைக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார் அறங்காவலர் வெ.நல்வேல்நாதன். புராணபடன சபைத் தலைவர் பண்டிதர்.கலாபூசணம்.க.மயில்வாகனனாரும், பொருளாளர் கலாபூசணம்.அ.முருகவேள் அவர்களும், மூப்பினால் தளர்வுற்றமையே காரணம். திருவாளர்கள் சி.வெற்றிவேலு, வா.பேரின்பசிவம், சீ.பலசுப்ரமணியசிவம் என்போர் முறையே தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தெரிவாகி 2004ம் ஆண்டு புனரமைக்கப்பட்ட புராணபடனசபை உருவாகியது. திரு. சீ.பலசுப்ரமணியசிவத்தின் திடீர் பதவிவிலகலைத் தொடர்ந்து திரு.த.திருமுத்துராசா பொருளாளராக தெரிவானார். புனரமைக்கப்பட்ட புராணபடனசபை செயற்படத்தொடங்கியதும் முன்னைய புராணபடனசபை பொருளாளர் அமரர்.முருகவேள் வசமிருந்த புராணபடனசபை நிதியான ரூபா பத்தாயிரம் அறங்காவலர் நல்வேல்நாதனிடம் ஒப்படைக்கப்பட்டு அப்பணம் பின்னர் புனரமைக்கப்பட்ட புராணபடனசபையின் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டது.
புனரமைக்கப்பட்ட புராணசபையின் செயற்பாட்டை நன்கு கவனித்த கிராமத்துப் பெரியோர்சிலர் இச்சபையில் அங்கத்தவராக இணைந்து மிகுந்த சிரத்தையுடன் பயிற்சிகளில் கலந்தும் புராணபடனத்தில் பங்குகொண்டும் தங்களாற்றலை வெளிக்காட்டி வருகின்றனர். கந்தபுராணப்பாடலை ஒருவர் வாசிக்க மற்றவர் பாடலின் பதவுரையை வாசிக்கும் இக்காலத்தில் பயன்விரித்துப் பொருள்சொல்லக் கூடியோரை சபை கொண்டிருப்பது சின்னக்கதிர்காமக் கந்தனின் திருவருள் என்றுதான் சொல்லவேண்டும். புராணபடனசபை தற்போது சீ.வெற்றிவேலு மற்றும் வே.சிவயநமதேவி ஆகியோரின் முறையே தலைவர், செயலாளராக கொண்டு சிறப்பாகக் இயங்கிவருகின்றது.

Untitled-1 copy

WP_20131109_040-compressed

WP_20131109_028-compressed