அன்னதான சபை

வட்டுக்கோட்டையூர் – வன்னியன்தோட்டம்
அருள்மிகு சின்னக் கதிர்காமம்
அன்னதான சபை

அறங்காவலர் வெ.நல்வேல்நாதன் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்ட அன்னதானசபையும் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது. உள்ளுர் வெளியூர் அன்பர்கள் நிதிசேகரிப்பிற்கு பங்குகொண்டு பெரிதும் உதவினர். அன்னதான சபையின் நிதிசேகரிப்பிற்குச் சிலர் எதிராகச் செயற்பட்டாலும் சபையைச் சேர்ந்த இளைஞர்கள் ஊக்கத்துடன் நிதிசேகரித்து விழாக்காலங்களில் அன்னதானப் பணியை சிறப்பாகச் செய்துவருகின்றனர். அன்னதனசபை தற்போது சீ.வெற்றிவேலு மற்றும் வே.சிவயநமதேவி ஆகியோரின் முறையே தலைவர், செயலாளராக கொண்டு சிறப்பாகக் இயங்கிவருகின்றது

நல்வேல்நாதன் ஞாபகார்த்த மண்டபம்
ஆலயத்தில் நடைபெறும் அன்னதான நிகழ்வுகள் போன்றவற்றை செவ்வனே நிறைவேற்ற ஒரு மண்டபம் ஆலயத்தை அண்டிய எல்லைக்குள் இயலுமான விஸ்தீரணத்தில் அமைக்க வேண்டுமென்ற பேரவா ஆலய முன்னால் அறங்காவலர் குகத்திரு.வெ.நல்வேல்நாதன் அவர்களுக்கு இருந்து வந்தது. அவருக்குப் பின் ஆலய நிர்வாகத்தைப் பகுதியிலிருந்த இடத்திலேயே அப்பணியை நிறைவேற்றி நல்வேல்நாதன் ஞாபகார்த்த மண்டபமென நாமம் சூட்டி தந்தையாரின் முதலாவது ஆண்டு நினைவுதினம் அமைந்த விகிர்தி வருட வைகாசி திருவாதிரை நன்நாளில் (17.05.2010) முறைப்படி திறப்பு விழாவும், அன்னதான நிகழ்வும் நடாத்தி வைத்தார்.

அன்னதான சபைக்கு அன்பளிப்பு நல்குவோர்

தேசிய சேமிப்பு வங்கி சங்கானை கிளை (Swift code :- NSB AL KLX)
கணக்காளர்       :- ந.முருகதாசன்
வங்கி இலக்கம் :- 107250136166

Untitled-5 copy 4